Categories
தேசிய செய்திகள்

10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வு அட்டவணை வெளியீடு…. உடனே பாருங்க…!!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணையை  சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பருவ தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதல் பருவத்தேர்வு நடைபெற்றது.

இதனையடுத்து தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யாம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகிற ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த பருவ தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறினார். மாணவர்கள் இதற்கு முன்பு நடந்த தேர்வின்போது ஒதுக்கப்பட்ட அதே தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப் போவதாக தெரிவித்தார்.

Categories

Tech |