Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்வு!

நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், குளிரூட்டப்பட்ட வசதி இல்லாத பயணிகள் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு இரண்டு பைசாவும், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட ரயில்களுக்கு நான்கு பைசாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு

மேலும், இந்தக் கட்டண உயர்வானது நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

Categories

Tech |