Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் என்று தெரியாமல்…. வாலிபர்கள் செய்த செயல்…. சுற்றி வளைத்த அதிகாரிகள்….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மந்திவலசை பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் திடீரென காவல்துறையினரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை பார்த்த அங்கு பதுங்கி இருந்த மற்ற காவல்துறையினர் உடனடியாக 3 போரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளியடியேந்தல் பகுதியை சேர்ந்த தினகரன், தினேஷ்பாபு, சேதுபதி என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |