தமிழகத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் நோக்கில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அந்த உணவுப் பொருட்களை வாங்கியதும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதில் அவர்கள் பெற்ற பொருளின் பெயர், எடை மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது வாங்காத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது என்று புகார் தெரிவிக்கின்றனர்.
அதாவது குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருளில் சர்க்கரை மட்டும் வாங்கி உள்ளனர். ஆனால் இவை அனைத்துமே வாங்கப்பட்டதாக குறுஞ்செய்தியில் அனுப்பப்பட்டுள்ளது. இப்பொருளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்ட மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும். அந்த மூட்டைகளில் 2 கிலோ குறைந்து ஒவ்வொரு மாதமும் 15,000 டன் தானியம் குறைவாக பெறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது குறித்து உணவுதுறை அதிகாரி கூறியதாவது, இந்த எடை குறைவு காரணம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி என்று தெரிவித்துள்ளார். இதனால் அட்டைதாரர்களுக்கு குறைவான அளவில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கூறியதாவது, கிடங்குகளில் இருந்து சரியான அளவில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள்தான் தங்கள் தவறை மறைக்க வேண்டும் என்று கிடங்குகளின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக அரசு உடனே தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சரியான எடை கொண்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.