Categories
உலக செய்திகள்

இளைஞர்களே ஜாக்கிரதை!…. நண்பர்கள் விட்ட சவால்…. உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர்…!!!

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒரு முழு மது பாட்டிலையும் ஒரே நேரத்தில் குடித்த நிலையில் கோமாவிற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் டேனியல் சாண்டுல்லி என்ற நபர் மிசோரி பல்கலைகழகத்தில், சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேர சென்றிருக்கிறார். அப்போது பிற மாணவர்கள் விளையாட்டிற்காக ஒரு முழு மது பாட்டிலையும் நிறுத்தாமல் குடிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்கள்.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட டேனியல், உடனடியாக ஒரு பாட்டில் ஓட்காவை குடித்திருக்கிறார். இதில் போதை மூளைக்கு ஏறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவ பரிசோதனையில் அவரின் ரத்தத்தில் 0.486% ஆல்கஹால் இருந்தது தெரியவந்தது. இது சட்டபூர்வமான வரம்பை காட்டிலும் 6 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது, டேனியல் சுயநினைவின்றி பேச முடியாத நிலையில் இருக்கிறார். இது பற்றி வழக்கறிஞரான டேவிட் பியாஞ்சி தெரிவித்துள்ளதாவது, என் 30 வருட அனுபவத்தில் இது போன்ற மோசமான செயலை சந்தித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |