Categories
சினிமா

சொல்லவே இல்ல…. “பிரேம்ஜிக்கு பொண்ணு செட் ஆயிருச்சா”…? இவரதானா அது…. தீயாய் பரவும் போட்டோஸ்….!!!!

பிரேம்ஜி பிரபல பாடகியுடன் இணைந்திருக்கும் போட்டோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரேம்ஜி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் வெங்கட்பிரபுவுக்கு சகோதரரும் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவர் அண்ணன் வெங்கட் பிரபுவின் படத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து விடுவார். இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம்ஜிக்கு 42 வயதாகிறது. இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் யுவன் சங்கர் ராஜா அவரிடம் துணை இயக்குனராக தன் இயக்குனர் பயணத்தை தொடங்கினார்.

இவருக்கு கடந்த சில வருடங்களாகவே பெண் பார்த்து வருகின்றனர். பிரேம்ஜி தனது இணையதளத்தில் தானொரு முரட்டு சிங்கில் என கூறிவந்தார். தற்பொழுது பிரேம்ஜி ஒரு பாடகியுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த பாடகி வேறுயாருமில்லை. ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பாடகி விநய்ட்டா . தற்போது பிரேம்ஜியும் விநய்ட்டாவும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் போட்டோ இணையத்தில் பிரேம்கி பதிவிட்டிருக்கிறார் . அப்புகைப்படத்தில் காதல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இது வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |