Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு ..!! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ…!!!!

புதுச்சேரியில் மனை  பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி  (50) இவர் தனது மகன் பிரியதர்ஷன் மற்றும் மகள் பிரியதர்ஷினியு டன் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டு உறவினர்களான செல்வி, சுப்பிரமணியன் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை காரணமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆதிலட்சுமி என் மகன் ப்ரியதர்ஷன் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள அந்த காலி இடத்தை எடுத்து செல்போனில் புகைப்படம்  எடுத்துள்ளார். இதனைக் கண்ட  செல்வி, சுப்பிரமணியன் தம்பதியினர். பிரியதர்ஷனை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. தனது மகனை திட்டியதைக்கண்ட ஆதிலட்சுமி பதிலுக்கு சுப்பிரமணியன் தம்பதியினரை திட்டியதாக தெரிகிறது.

இதில் கோபம் அடைந்த சுப்பிரமணியன் தம்பதியினர் தாய் ஆதிலட்சுமி மற்றும் மகள் பிரியதர்ஷினி கட்டையால் தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

 

 

 

.

Categories

Tech |