கன்னி ராசி அன்பர்களே…! தாயின் அன்பும் ஆசியும் பலமாக கிடைக்கும்.
சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு கண்டிப்பாக உயரும். பணவரவு இன்று நன்மையை கொடுக்கும். சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. வீண் செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். சோர்வாக இருந்த நிலை மாறி விடும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். பெண்களுக்கு ஆசை நிறைவேறும் நாளாக இருக்கும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். மாணவர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டுவிடும். மாணவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்டு எதிலும் ஈடுபட முடியும்.
கல்விக்காக மட்டும் மாணவர்கள் உழைக்க வேண்டும். காதல் விஷயங்களில் தெளிவாக முடிவு எடுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.