தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,”மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் சொல்லும் பழனிசாமி என மக்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்;
பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பொய் சொன்னவர்தான் இந்த பழனிசாமிஅண்ணா என்னை விட்டுடுங்க… என ஒரு பெண் கதறியதை பார்த்து துடித்துப்போனோமே; அந்த பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றவர்தான் இந்த பச்சை பொய் பழனிசாமிஅண்ணா என்னை விட்டுடுங்க… என ஒரு பெண் கதறியதை பார்த்து துடித்துப்போனோமே; அந்த பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றவர்தான் இந்த பச்சை பொய் பழனிசாமி.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.