தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டம் மூன்றாவது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சத்ரிய குமார் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சத்ரிய குமார் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஓட்டுக்கு யாரும் காசு வாங்க கூடாது என கூறியுள்ளார்.
தொடர்ந்து காசு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போட்டு விடுங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் ஒரு வேட்பாளர் இவ்வாறு பேசலாமா இவரையெல்லாம் வேட்பாளராக நிறுத்திய அந்த கட்சியை தான் சொல்ல வேண்டும் என சாடியுள்ளனர். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க இதுபோன்ற சில வேட்பாளர்கள் நடந்துகொள்வது பொதுமக்களை முகம் சுளிக்க செய்கிறது.