குடும்ப பிரச்சினையால் காணாமல்போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. நகரில் சுபாஷ்சந்திரபோஸ்-சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சங்கீதா கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல்போன சங்கீதா குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.