Categories
மாநில செய்திகள்

2022 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே…. பிப்…28 கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசுத்துறை காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுதக் கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் கட்டாயமாகும். அப்போதுதான் பிற பாடப்பகுதிகள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மொழித் தேர்வு வினாக்கள் 10ஆம் வகுப்பு தரத்தில் உருவாக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அரசு பணிகளில் 100  சதவீதம் பணியமர்த்தும் அடிப்படையில் இத்தகைய புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதிய அறிவிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பின் தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் தொடர்பான விபரங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இனிமேல் வரும் காலங்களில் நிரந்தரப் பதிவு கணக்கு வாயிலாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களுக்கு 18004190958 எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்..

Categories

Tech |