விருச்சிகம் ராசி அன்பர்களே…! சமூகப் பணி புரிவதில் ஆர்வம் கூடும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அனைத்தும் விலகிவிடும். நிலுவை பணம் வசூலாகி விடும். கணவன் மனைவி உறவில் அன்பு கிடைக்கும். கருத்து வேறுபாடு கூட சரியாகிவிடும். தொழிலில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையக்கூடும். சிரமம் தந்த வேலை கூட சிறப்பாக இருக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் இருக்கும். உடல் நலத்தை மட்டும் சிறப்பான வகையில் பார்க்க வேண்டும். சத்தான உணவு ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தேவையில்லாத கடனை வாங்க வேண்டாம். பெண்கள் இல்லத்தில் சட்டென்று கோபம் உண்டாகும். வேலைதேடும் பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். குடும்ப கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும். காதலில் கூட வெற்றி கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்.