ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் “மாணவர் மனசு” பெட்டி திறப்பு விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர் “மனசு பெட்டி” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மேலாண்மைக் குழு தலைவி ஆனந்தஜோதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஞானராஜ், ஆசிரியர் ரோஸ்லினாராஜ்,, வசந்தி, காயத்ரி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மாணவர்கள் இந்தப் பெட்டியில் எழுதி போடலாம் என்றும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றியுள்ளார்.