Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டு வேலைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து இருக்கிறது. இந்த இடைநிற்றலை தவிர்ப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது..

இதையடுத்து தற்போது தமிழக அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்காக வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக வழங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிவிப்பில், தமிழகத்தில் விடுதியில் தங்கிப் பயிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2,100 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது 4,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தினமும் வீட்டிற்கு சென்று வரும் மாணவர்களுக்கு 1,200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை தற்போது 2,500 ரூபாய் வரை உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து டிப்ளமோ படிக்கும் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தால் அவர்களுக்கு வருடந்தோறும் 2,700 ரூபாய் வழங்கப்பட்டு வருவதை 9,500 ரூபாயாக உயர்த்தி வழங்க உள்ளது. அதுமட்டுமின்றி நாள்தோறும் வீட்டிற்கு செல்லும் மாணவர்களுக்கு 1,680 ரூபாயிலிருந்து 6500 ஆக உயர்த்தி உள்ளது. இதில் விடுதியில் தங்கி படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 4,200 ரூபாயை 13,500 ரூபாய் வரை உயர்த்தி வழங்க இருக்கிறது. மேலும் தினசரி வீடு செல்லும் மாணவர்களுக்கு 2,100 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |