Categories
அரசியல்

தேர்தல் களம் : “மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் …!” வெளியான திடீர் அறிவிப்பு….!!

இந்தியாவில் மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் மணிப்பூர் மாநில தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் ஏற்கனவே சொன்ன தேதியில் இருந்து மாற்றம் செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதியில் இருந்து 28 ஆம் தேதிக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதியில் இருந்து மார்ச் 5ஆம் தேதிக்கும் மாற்றி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |