கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனலட்சுமி என்ற 19 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி நாள் முழுவதும் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த மாடசாமி சந்தான லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தான லட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சந்தானலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.