Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு…. “எங்க டார்கெட் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு சமமான போட்டி களத்தை உருவாக்கி தருவதற்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுடைய இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான போராட்டம் அல்ல.

பாகுபாடு காட்டும் பயிற்சி நிறுவனங்களால் தூக்கி பிடிக்கப்படும் நீட் தேர்வால் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு ஒரு சமமான போட்டி களத்தை உருவாக்கி கொடுப்பதே எங்கள் நோக்கம். அதேபோல் இந்தியாவில் கூட்டாட்சியியலை வலுப்படுத்தவும் போராடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |