ஆற்றில் தவறி விழுந்து பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரிகிலாபாடி பகுதியில் ஓட்டுநரான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கல்லாறு பகுதியில் இருக்கும் நீரில் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி விழுந்து நந்தினி நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி நந்தினியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.