கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.
செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இன்று காரியங்களை செய்யும்போது நிதானம் இருக்கட்டும். அதேபோல தனவரவு இன்று ஓரளவு கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இன்று இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்