தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேல்ஆலத்தூர்-வளத்தூர் ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த டபுள்டக்கர் விரைவு ரயில் மோதி ஜெயராமன் உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.