Categories
சினிமா விமர்சனம்

“இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா”…. பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான்…. பொங்கிய கஸ்தூரி….!!!

பயில்வான் ரங்கநாதனுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுயிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது பத்திரிகையாளராக செயல்படுகிறார். இவர் அண்மைக் காலமாகவே நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். சினிமா துறையில் உள்ள பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் பத்திரிகையாளரானபிறகு சற்று பிரபலமாகியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் நடிகர் மற்றும் நடிகைகள் சொந்த விஷயங்களை பற்றி அவதூறாக பேசி வெளியிடுகிறார். இதனால் பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அண்மையில் இவர் ராதிகா, சரத்குமார் மற்றும் விஜயகாந்த் குறித்து தப்பாக பேசியதால் சர்ச்சையில் மாட்டினார். எதிர்ச்சியாக ராதிகா பயில்வானை சந்தித்திருக்கிறார். அப்போது பயில்வானனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இவர் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து பலவற்றை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர் தற்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ஓவியா , பத்திரிக்கையாளர்கள் என பலரை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதோ உங்களுக்காக…

 

Categories

Tech |