தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மரிமானிக்குப்பம் பூங்குளம் புதூர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.