Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. வங்கியில் பயங்கர தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வங்கியில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் சிவசக்தி தியேட்டர் செல்லும் வழியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென இன்வெர்ட்டரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர்கள் போன்றவை எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |