Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்களே…! பிப்-26 ஆம் தேதி ரத்து…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும் மற்றும் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |