பாலம் உடைந்து விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.
மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள் இருக்கின்றன. எனவே கனரக லாரிகள் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பாலத்தின் மீது லாரிகள் செல்ல கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கிராவல் மண் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி பாலத்தின் மீது சென்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததால் லாரி சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார்.