நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல பொய்கள் கூறினார். 500 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நாடே அறியும். அந்த அரிசியை மாட்டுக்கு வைத்தால் மாடு கூட சாப்பிட மாட்டேன் என்கிறது.
அதோடு வைத்தவரை முறைத்து பார்க்கிறது. இப்போது வரை கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பி.எஸ் வேலுமணி கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. தற்போது எல்லாத் திட்டங்களும் மந்தமாக செயல்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் பணத்தை மட்டும் வைத்து திமுக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது என கூறினார்.