Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படியும் ஒரு மனிதரா…? ஊழியருக்கு பென்ஸ் கார் பரிசு…. எதற்காக தெரியுமா…!!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஏ.கே ஷாஜி. இவர் ‘மாஜி’ என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணி புரிந்த அனீஸ் என்பவருக்கு ஷாஜி பென்ஸ் எஸ்யூவி காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். கார் வழங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “அன்புள்ள அணிஷ் என்னுடன் 22 வருடமாக பக்கபலமாக நிற்கிறாய். உன்னுடைய இந்த புதிய துணையை நீ விரும்புவாய் என நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார் ஷாஜி. இதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னுடைய ஊழியர்கள் 600 பேருக்கு தீபாவளி பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |