பேருந்தில் கோழியுடன் பயணம் செய்த நபரிடம் கோழிக்கும் சேர்த்து பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில்(டிஎஸ்ஆர்டிசி) முகமது அலி என்பவர் ஏறியுள்ளார். அப்போது இந்த பயணியிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் வசூலித்தார். பிறகு பாதி வழியில் பேருந்து சென்றபோது அவரது கையில் துணியால் சுற்றப்பட்ட சேவலை கண்டதும் அதற்கும் டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார்.
இதனால் இவருக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் வாக்குவாதத்தில் நடந்த சண்டை காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பின் 30 ரூபாய் கூடுதல் பயண கட்டணம் கோழிக்கு கண்டக்டர் பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்ஆர்டிசி கோதாவரி டிப்போ மேலாளர் கோதாவரி தரப்பில் கூறப்பட்டதாவது, கோழிக்கு பயணச்சீட்டு கொடுப்பதற்கு பதிலாக விலங்குகளுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி அந்த பயணியை கண்டக்டர் இறக்கிவிட்டு இருக்கலாம்.
ஆனால் துணியால் சுற்றப்பட்டிருந்ததால் நடத்துனர் முதலில் அதை கவனிக்கவில்லை. இந்நிலையில் இச்சம்பவத்தில் கவனக்குறைவாகவும், விதிகளை மீறியும் சேவலுக்கு பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நடத்துநரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.