Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள்…. விரட்டி சென்ற போலீசார்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய 3 கொள்ளையர்களில் இருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.   

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) ஆகியோர் இருந்தனர். இந்த 3 குற்றவாளிகளும் பிப்ரவரி 4-ஆம் தேதி சிறையில் இருந்த துவாரம் வழியாக தப்பித்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை சிறையில் இருந்து 404 மையில் தூரத்தில் உள்ள நார்த் கரோலினா பகுதியில் ஸ்னீட்ஸ் என்னும்  கடையில் டோபியாஸ் மற்றும் சர்வர் இருவரும் கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் அந்த கடையில் பணிபுரியும் ஊழியரை கட்டி வைத்து விட்டு பணத்தை கொள்ளையடித்த பின்னர் அவரது லாரியை எடுத்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை சிசிடிவி காட்சிகள் மூலம்  அறிந்த காவல் துறையினர் அவர்களை விரட்டி சென்றனர். இதனை அறிந்த 2 குற்றவாளிகள்  லாரியில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த குற்றவாளிகள் விபத்தினால் இறந்தினரா இல்லை சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்பதை காவல் துறையினறால் இன்னும்  தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும் ஜானி பிரவுன் என்பவர் இன்னும் தலைமறைவாக தான் இருக்கிறார், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து  இவர்கள் மூவரும் சிறைவாசத்திற்கு முன்பே நண்பர்களா என்பது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |