இந்தியாவில் உத்திரப் பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம் என பல்வேறு வாக்குறுதிகள் அதில் அடங்கும்.
உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவும் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான ஒ.பி ராஜ்பார் “எங்களது ஆட்சி அமைந்தால் இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் கூட நாங்கள் அபராதம் விதிக்க மாட்டோம். விட்டு விடுவோம்..!” என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் . இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.