தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் சிறந்த நடிகர் ரஜினி. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து கொண்டிருக்கும். இவரை பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இவர் தன்னால் எப்போதும் மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.
அந்தவகையில் 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதில் ரஜினி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை அழைத்து எவ்வளவு பணம் நஷ்டம் அடைந்ததோ அதை அவரே திருப்பி கொடுத்துள்ளார். எந்த ஒரு கதாநாயகனும் செய்யாத காரியத்தை இவர் செய்து இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.