சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்து வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி சென்றுள்ளது.அந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. மேலும் இதுபற்றி அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 33 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்துகான காரணம் குறித்து தெரியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.