Categories
இந்திய சினிமா

துல்கர் சல்மானின் புதிய படம்…. இன்று இசை வெளியீடு… வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரபலம்….!!!

துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே  சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட்  நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார்

திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அறிவிப்பு வெளியானது. அதில் மார்ச் மாதம்3 ம்  தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இப்படத்தின் “அச்சமில்லை அச்சமில்லை” பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தில் “மேகம்” என்ற பாடலை நடிகர் சிம்பு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் பாலிவுட் பிரபல நடிகரான ரன்பீர் கபூரின் ஹே  சினாமிகா படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |