தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.