Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 மாதம் கர்ப்பமாகவுள்ள சிறுமி…. தந்தை செய்யும் வேலையா இது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறும் சம்பவம் தொடர் கதையாக மாறிவிட்டது. இந்நிலையில் தந்தையே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே 17 வயது சிறுமி தனது தந்தை கோவிந்தன் என்பவருடன் வசித்து வருகிறார். இதில் சிறுமியின் தாயார் இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது சிறுமியின் தந்தை கோவிந்தன், அவரின் நண்பர் கந்தகோணி என்ற முனுசாமி இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |