Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் மோதல்…. 30 பயணிகளின் நிலைமை?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 30 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து காரணமாக மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |