Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாரும் பயப்படாம வாங்க…. போலீசாரின் கொடி அணிவகுப்பு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினரின் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் வழியாக சென்று எமனேஸ்வரம், வைகை நகர் பகுதியில் நிறைவடைந்துள்ளது.

இந்த ஊர்வலத்திற்கு துணை சூப்பிரண்டு அதிகாரி திருமலை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஆயுதப்படை துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜ்மோகன், பரமக்குடி இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, முகமது மற்றும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தேர்தல் அன்று பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |