100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புதைபடிவ மலர்கள் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
சீனாவிலுள்ள ஜூங்தாவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றில் ஆம்பர் எனப்படும் டைனோசர் காலத்தில் மலர்ந்த மலரை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த மலர் மஞ்சள்நிற புதைபடிவ பொருளில் பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆய்வு முடிவுகள் கடந்த வாரம் “நேச்சர் பிளான்” எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 21 மஞ்சள் நிற புதைபடிவ பொருட்களின் மேற்பரப்பு,உருவ அமைப்பு மற்றும் முப்பரிமாண உட்புற அமைப்பு ஆகியவற்றை இக்குழு பகுப்பாய்வு செய்து உள்ளது. மேலும் சி.டி. ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த ஆய்வுக்குழுவினர் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட கிளைகள், இலைகள், மற்றும் இதர உறுப்புகளின் வடிவங்களை கண்டறிந்தனர். தென் கிழக்கு ஆசியாவில் மலரும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் தண்டுகளின் இடமாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த குழு துணை புரியும் என நம்பப்படுகிறது.