திம்பம் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதற்கிடையில் மலைப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது.
இவ்வாறு இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 5 மணி நேரத்திற்கும் மேலாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து சீராகாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.