நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக கொரோனா தொற்று தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரையிலும் 2 அலைகளை மாநில அரசுகள் கடந்து வந்த நிலையில் இறுதியாக 3-ம் அலையில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தாக்கம் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் வீரியமானது முந்தைய பாதிப்புகளை போன்று இல்லாமல் அதிகமாகவே இருந்தது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் கடந்த மாதம் வரையிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்…1 ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் பிப்..15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப்..15 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், தலைமை செயலாளர், மற்றும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்..