Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு 2 வாரம் காலஅவகாசம்…. அதிரடி உத்தரவு…!!!

விஜய் மல்லையாவுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிரபித்துள்ளது. 

விஜய் மல்லையா வங்கிகளில் 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றவர். இவர் பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இதனை மீறி அவரது பிள்ளைகளுக்கு அவர் பண பரிவர்த்தனை செய்ததாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு பிறகு தண்டனை தொடர்பாக அந்த நபரின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

ஆனால் பல முறை வாய்ப்பு அளித்தும் அவர் இதுவரை ஆஜராகவில்லை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம். மேலும் கடந்த வருடம் நவம்பர் 30-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட் அப்படி நடந்து கொள்ள குற்றவாளிகளுக்கு இரண்டு வார கால அவகாசம் தரப்படுகிறது. மேலும் அவர் கோர்ட்டின் முந்தைய உத்தரவை குற்றவாளி பயன்படுத்திக் கொள்ள தவறினால் தண்டனை பற்றிய விவரங்களை கோர்ட்டு அறிவிக்கும் என உத்தரவிட்டார்கள்.

Categories

Tech |