தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகின்றன. இந்த தேர்வு மூலம் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு தணிக்கை துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. அதன்படி உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 56,100 – 1,77,500 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 01/07/2022 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
அதன்படி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு 30/04/2022 அன்று நடைபெறும். அதன்பின் செயல் அலுவலர் நிலை-I இந்து சமய அறநிலையத்துறை (Executive Officer Grade – I) பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இப்பணிக்கு 01/07/2022 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதனிடையில் SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது. அதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 37,700 – 1,19,500 வழங்கப்படும்.
இந்த பணிக்கு எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 23/04/2022, 24/04/2022 ஆகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் முன்பே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன்மூலமாக விண்ணப்பிக்கலாம். அதாவது ரூபாய் 150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை மற்றும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. இவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21/02/2022 ஆகும்.