நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படத்திற்கு சில நாடுகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஃப். ஐ.ஆர்’. மனோ ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அஸ்வத் இசையமைத்து, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
😔🤫🤫
Sorry #MALAYSIA and #KUWAIT audience… https://t.co/mUDZA3mJK4— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 10, 2022
இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் குவைத், கத்தார் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ‘எஃப். ஐ.ஆர்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் குவைத், கத்தார் மற்றும் மலேசியா நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.