கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளும் படிப்பு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.இந்த கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளம் பிரதன் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளை இணைந்து மேற்கு வங்காளத்தில் நடத்தியுள்ளன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11,148 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, இணைய தளத்தில் வெளியிட்டார். மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், “ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.