விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்கு சாலை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முருகன், லட்சுமி ஆகிய 2 பேரும் தங்களது விவசாய நிலத்தில் பணிக்கு சென்று விட்டனர். அதன்பின் பணி முடிந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.10 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 5 பவுன் செயின் மற்றும் 3 பவுன் மோதிரம் தப்பியது. இதுகுறித்து முருகன் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.