தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் மனைவி செல்வி கணவரிடம் குடி பழக்கத்தை விட சொல்லி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இரவு மது குடித்து விட்டு தூங்கச் சென்ற பழனிசாமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி செல்வி சந்தேகமடைந்து அறையின் ஜன்னல் வழியே பார்த்துள்ளார்.
அப்போது பழனிசாமி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதுகுறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.