Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு…. இந்த தேதியில் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தேர்தலுக்காக பல பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தப்படும். அப்போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் சந்தேகத்துக்குரியது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சார நேரங்களுக்கான கட்டுப்பாட்டையும் அறிவித்துள்ளது.

மேலும் வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வாக்குப்பதிவு நாளில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |