Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்….. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில், அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். இதையடுத்து அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் உள்ளிட்ட பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. ஆகவே தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தினை உடனே ரத்து செய்ய கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 2022ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். அந்த வகையில் கடந்த மாதம் 1ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி துரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் சோலையன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜாக்டோ ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |