தேனியில் அடுத்தடுத்து மாணவிகள் உள்பட 6 பேர் திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள திருமலாபுரம் 1-வது தெருவில் வசித்து வரும் அர்ச்சனாதேவி(17) பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து போடி டவுன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து உத்தமபாளையம் அடுத்துள்ள கோவிந்தன்பட்டி ஆர்சி கிழக்குத் தெருவை சேர்ந்த பிரியா அவரது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உத்தமபாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதேபோல் போடி துரைராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்த கிரிஜா(19) என்ற மாணவி கண்டமனூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த கடைக்கு சென்ற கிரிஜா திடீரென மாயமானார். இதுகுறித்து கண்டமனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இதனைதொடர்ந்து சீலையம்பட்டி வசிக்கும் ஜமீர் அக்தார் (23) என்ற வாலிபர் வேலைசென்று விட்டு மீதும் வீடு திரும்பவில்லை. இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காமயக்கவுண்டன்பட்டி சென்னையசாமி மடம் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வரும் ரிஷ்வந்தும்(23) தனது நண்பரை பார்க்க சென்றபோது மாயமாகியுள்ளார். இந்த வழக்கை ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து கோவில் தெருவில் வசிக்கும் மாடு வியாபாரியான முருகன்(47) சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வாருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து மாணவிகள் உள்பட 6 பேர் மாயமான சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.